சென்னை : தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் வீட்டில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை..!! - Seithipunal
Seithipunal



தமிழ் திரைத்துறையில் தயாரிப்பாளராக இருக்கும் ரவீந்தர் சந்திரசேகரன் வீட்டில் அமலாக்கத்துறையினர் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். 

தமிழ் திரைப்படத் துறையில் லிப்ரா ப்ராடக்க்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களைத் தயாரித்து வருபவர் ரவீந்தர் சந்திரசேகரன். இவர் சுட்ட கதை, முருங்கக்கா சிப்ஸ், நளனும் நந்தினியும் உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். மேலும் பிக் பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸ் நடிப்பில் ஒரு பெயரிடப்படாத திரைப்படத்தையும் தயாரித்து வருகிறார். மேலும் இவர் மார்கண்டேயனும் மகளிர் கல்லூரியும் என்ற திரைப்படத்தை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. 

மேலும் இவர் அவ்வப்போது பல்வேறு படங்களை விமர்சித்தும் தனது யூடியூப் சேனலில் வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு சின்னத்திரையில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து மிக  பிரபலமாக இருக்கும் மகாலட்சுமி என்பவரைத் திருமணம் செய்து  கொண்டார்.

அன்றிலிருந்து தற்போது வரை இந்த தம்பதிகள் மீது சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான வன்ம கருத்துக்கள் முன் வைக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆனால் நெட்டிசன்களின் இந்த வன்ம கருத்துக்களால் இவர்கள் வாழ்க்கையில் இதுவரை எந்த பிரச்சினையும் எழவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது 

இந்நிலையில் தான் இன்று காலை முதல் சென்னை அசோக் நகரில் உள்ள தயாரிப்பாளர் ரவீந்தரின் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக கடந்த ஆண்டு ரவீந்தர் சந்திரசேகரன் பணமோசடி வழக்கில் கைது செய்யப் பட்டது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ED Raids in Tamil Movie Producer House in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->