ரீ என்ட்ரி? சாதி ஆதிக்கம்! ஒரே வார்த்தையில் நொறுக்கிய எடப்பாடி பழனிச்சாமி! - Seithipunal
Seithipunal


அதிமுகவில் தற்போது ஜாதி அரசியல் செய்கிறார்கள் என்றும், நான் ஜாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன் வேண்டும் என்றும் சசிகலா தெரிவித்து இருந்தார்.

அண்மையில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா தெரிவிக்கையில், "சிலரின் சுயநலத்தால் தற்போது அதிமுக சரிவை சந்தித்து உள்ளது. ஒரு சாதாரண ஏழைகூட அதிமுகவில் எம்எல்ஏ, எம்பி ஆகாலாம். இது நம் கட்சியில் மட்டுமே சாத்தியம். ஆனால் திமுகவில் அப்படி இல்லை. தொண்டர்கள் உழைக்கணும், திமுக குடும்ப வாரிசுகள் தான் பதவிக்கு வருவார்கள்.

எனக்கு ஏதோ ஒரு குறிப்பிட்ட சாதியினர்தான் சொந்தம் என்றெல்லாம் இல்லை. புரட்சி தலைவி அம்மா சாதி பார்த்து பழகியது இல்லை. நான் அன்று சாதி பார்த்திருந்தால் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஆக்கியிருக்க மாட்டேன். ஆனால், நம் கட்சியில் தற்போது குறிபிட்ட சாதியினர் சாதி அரசியல் செய்து வருகின்றனர்" என்று சசிகலா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமியிடம், சசிகலாவின் விமர்சனம் மற்றும் அவரின் அரசியல் ரீ என்ட்ரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்க்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, "அதிமுகவில் ஒரு சாதி ஆதிக்கம் செலுத்துவதாக எப்படி சொல்கிறார் சசிகலா. அதிமுகவில் சாதி அரசியல் இல்லை. யாரும் சாதி பார்த்ததில்லை.

3 ஆண்டுகள் விடுமுறையில் சென்றிருந்த சசிகலா, இப்போது ரீ என்ட்ரி என்கிறார். 2021ல் அரசியல் ஓய்வு என கூறிய சசிகலா, இப்போது ஏன் வருகிறார்?

இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்ட ஓபிஎஸ்-யை எப்படி கட்சியில் சேர்க்க முடியும். அதிமுகவிற்கு எப்போதுமே விசுவாசம் இல்லாத நபர் ஓபிஎஸ்.

மத்திய அமைச்சராகலாம் என்ற சுயநலத்தில் பாஜகவில் இணைந்து போட்டியிட்டார். அதிமுகவிற்கு யார் துரோகம் செய்தாலும் ஓபிஎஸ் நிலைமை தான் ஏற்படும்" என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi Palanisamy reply ADMK Caste issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->