எஸ்பி வேலுமணியுடன் மோதலா? எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


சேலத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவிக்கையில், "மத்தியிலே ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள், மாநிலத்திலே ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் பிரச்சாரம் செய்த போதும், அதோடு ஊடகங்கள், பத்திரிக்கைகளின் எந்தவித ஆதரவும் இல்லாத சூழ்நிலையில் அதிமுக மற்றும் கூட்டணி 2019 தேர்தலில் பெற்ற வாக்குகளை விட 2024 தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றுள்ளது மகிழ்ச்சி.

தேர்தலில் வெற்றி தோல்வி என்பது மாறி மாறி தான் வரும். அதற்காக அரசியலில் பின்னடைவு என்பதெல்லாம் திட்டமிட்டு பரப்பப்படுகின்ற பொய்யான செய்தி.

பாஜக வளர்ந்து விட்டது என்று ஊடகங்களும் பத்திரிகைகளும் பொய்யான தகவல்களை தெரிவித்து வருகிறது. அண்ணாமலை கருத்து குறித்து என்னிடம் கேட்க என்ன இருக்கு? அவர் விலகியிருக்கின்ற நிலையில் அவர் ஆதங்கத்தை அவர் வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார் இதில் நான் சொல்ல என்ன இருக்கு? 

அண்ணாமலை தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். எனக்கும் எஸ்பி வேலுமணிக்கும் எந்த பிரச்னையும் இல்லை. 

2014 தேர்தலை விட பாஜக குறைவான வாக்குகளே பெற்றுள்ளது பாஜக. 10 ஆண்டுகள் ஆயினும் பாஜக வளரவில்லை. திமுக 2019 தேர்தலில் 30% மேல் வாக்குகள் பெற்றது தற்போது 26% ஆக குறைந்த விட்டது.

எங்கள் கூட்டணிக்கு நானும் மரியாதைக்குரிய பிரேமலதா அவர்களும் தான் அனைத்து தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரம் மேற்கொண்டோம். பல பிரச்சனைகளுக்கு இடையிலும் இந்த வாக்கு சதவிகிதத்தை நாங்கள் பெற்றிருப்பது சாதனை தான். அண்ணா திமுக வாக்கு சதவிகிதம் உயர்ந்து உள்ளது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு வாக்கு சதவிகிதம் அதிகரிக்கவில்லை;

திமுகவின் வாக்கு சதவிகிதமும் குறைந்துள்ளது. தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள சரிவுகள் சரி செய்யப்படும். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், சசிகலா ஆகியோர் தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Edappadi pazhanisamy say about SP Velumani ADMK vs BJP Annamalai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->