புகைப்படத்துடன் பதிவேற்ற வேண்டும்.. அரசுப் பள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு.!
education department order renovation work photo uplode emis
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் அனைத்து அரசுப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பு விவரங்களை துறைசார்ந்த பொறியாளர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்யப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அந்த உத்தரவில், நீதிமன்ற தீர்ப்பின்படி, பள்ளி உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்ட கல்வி அலுவலர்கள் விரைந்து அனுமதி அளிக்க வேண்டும். பள்ளி அளவில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்த அறிக்கையை EMIS இணையதளம் வாயிலாக புகைப்படத்துடன் பதிவேற்ற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
education department order renovation work photo uplode emis