இது என்ன உங்க அப்பன் வீட்டு பணமா? - ஆர்ப்பாட்டத்தில் அலறவிட்ட அன்பில் மகேஷ்.!
education minister anbil magesh speech in protest
இன்று சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகில் மும்மொழிக் கொள்கை, தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி ஒதுக்காதது உள்ளிட்டவற்றை கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளதாவது:-
"சுமார் 38 ஆண்டுகளுக்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அடுத்த, மொழிப் போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரா பிரதான பேச்சிற்கு பிறகு நமது மூச்சில் கலந்த மொழிப்போர் தியாகிகளின் உயிர் மீண்டும் உயிர்த்தெழ ஆரம்பித்துள்ளது. அவர்கள் உங்களுடைய உருவின் இங்கு நின்று கொண்டுள்ளது.

தமிழ்நாடு மும்மொழி கொள்கையை ஏற்றுக்கொண்டால் தான் கல்வி நிதி தருவேன் என்று 3 நாட்களுக்கு முன்பு ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். அரசியலமைப்பு சட்டத்தில் மும்மொழி கொள்கை எங்கு உள்ளது. தேசிய கல்விக்கொள்கைக்கும் நமக்கு ஒவ்வொரு வருடமும் சேர வேண்டிய கல்வி நீதிக்கும் எந்த சம்மந்தமும் கிடையாது.
தமிழக பாஜக தலைவர் வெளிநாட்டில் 6 மாத காலம் படித்துவிட்டு இப்போது பொய்யாக பேசி வருகிறார். அவர் தனது கையில் ACER அறிக்கை என்ற ஒன்றை வைத்துக்கொண்டு தமிழ்நாட்டை விட உ.பி.யும் பீகாரும் சிறப்பாக இருக்கிறது என்று பேசுகிறார்.
அந்த ACER அறிக்கை பாஜகவின் ஒரு அஜெண்டா தான். உத்தர பிரதேசத்தில் 25,000 அரசுப் பள்ளிகளை மூடிவிட்டு, 15,000 தனியார் பள்ளிகளை திறந்தார்கள். அதையேதான் தமிழகத்திலும் செய்ய முயற்சிக்கிறார்கள். நம் வரிப்பணத்தில் 1 ரூபாய் கொடுத்தால் 29 பைசா தான் ஒன்றிய அரசு தருகிறது.
இது என்ன உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? என்று கேட்டதற்கு உங்களுக்கு கோவம் வந்ததே, இப்போது கேட்கிறோம் ரூ.2,151 கோடி உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஆகவே எங்கள் பணத்தை எங்களிடம் கொடுங்கள்" என்று தெரிவித்தார்.
English Summary
education minister anbil magesh speech in protest