அதிரடியாக உயர்ந்த முட்டை விலை - அதிர்ச்சியில் வியாபாரிகள்.!
egg price increase in namakkal
தமிழகத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, பெருந்துறை, கோவை உள்ளிட்ட இடங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு சுமார் 6 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இங்கிருந்து தமிழ்நாடு அரசின் சத்துணவு திட்டத்திற்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், நாமக்கல்லில் இருந்து முட்டைகள் மஸ்கட், துபாய், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இந்த நிலையில், நாமக்கல்லில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு ஒவ்வொரு நாளும் கொள்முதல் விலையை நிர்ணயித்து, வரத்து மற்றும் தேவையின் அடிப்படையில் முட்டையின் விலையை நிர்ணயம் செய்கிறது.
அதன் படி, தற்போது நாமக்கல்லில் முட்டை விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து 5 ரூபாய் 90 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை நிர்ணயம் கிறிஸ்துமஸ், ஆங்கிலப் புத்தாண்டை கருத்தில் கொண்டு உயர்த்தப்பட்டுள்ளது.
English Summary
egg price increase in namakkal