தொடர் உச்சத்தில் முட்டை விலை! மகிழ்ச்சியில் பண்ணையாளர்கள்.!  - Seithipunal
Seithipunal



நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் செயல்படுகிறது. இங்கு ஆறு கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் ஐந்து கோடிக்கும் அதிகமான முட்டை உற்பத்தி செய்யப்படுகிறது. 

இந்த முட்டைகள் தமிழக அரசு சத்துணவு திட்டத்திற்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கேரளா, ஆந்திரா கர்நாடகா போன்ற பல்வேறு மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு தினசரி பண்ணைகளின் ரொக்க விற்பனைக்கு முட்டை விலையை அறிவித்து வருகிறது. அதன் அடிப்படையில் பண்ணையாளர்கள் கடைபிடித்து விற்பனை செய்கின்றனர் இந்நிலையில் கடந்த ஆறாம் தேதி 460 காசுகள் இருந்த முட்டை விலை படிப்படியாக உயர்ந்து நேற்று 540 காசுகளாக விற்பனை செய்யப்பட்டது.

இதற்கிடையே நேற்று நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றதில், முட்டை உற்பத்தி மார்க்கெட்டிங் நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். 

இதனை தொடர்ந்து 540 காசுக்கு விற்பனை செய்யப்பட்டு வந்த முட்டை விலையை மேலும் 5 காசுகள் உயர்த்தி 545 காசுகளாக நிர்ணயம் செய்துள்ளனர். முட்டை கொள்முதல் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

முட்டை விலை சென்னையில் 600 காசுகளாகவும், ஹைதராபாத் 520 காசுகள், விஜயவாடா 520 காசுகள், மும்பை 575, மைசூர் 545, பெங்களூர் 585 என விற்பனை செய்யப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

egg prices rise issue


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->