சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த விமானங்கள் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


சென்னையில் தரையிறங்க முடியாமல் வட்டமடித்த விமானங்கள் - காரணம் என்ன?

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவில் முதல் இடி மின்னலுடன் பலத்த பெய்து வந்தது. இதன்   காரணமாக, சென்னை விமான நிலையத்தில், விமான சேவைகள் பெருமளவு பாதிக்கப்பட்டன.

அதாவது, டெல்லியில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 154 பயணிகளுடன் நேற்று நள்ளிரவு 11:35 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தரை இறங்க வந்தது. ஆனால், அப்போது சூறைக்காற்று, இடி மின்னலுடன் கனமழை பெய்ததால் விமானம் தரை இறங்க முடியாமல், பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

இதேபோன்று ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து 268 பயணிகளுடன், நள்ளிரவு 12:05 மணிக்கு சென்னைக்கு வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும், இன்று அதிகாலை 1:15 மணிக்கு, கொல்கத்தாவில் இருந்து, 167 பயணிகளுடன் சென்னையில் தரையிறங்க வந்த, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானமும் சென்னையில் தரை இறங்க முடியாமல், பெங்களூர் திரும்பிச் சென்றது.

மேலும், பாரிஸ் நகரில் இருந்து சென்னை வந்த ஏர் பிரான்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், ஹைதராபாத்தில் இருந்து வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டம் வடித்து விட்டு, தாமதமாக தரையிறங்கின. விமானங்கள் தாமதமானதால் பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight flights divert bangalore airport for heavy rain in chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->