எட்டு தமிழக படகுகளை அரசுடைமையாக்கிய இலங்கை நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஜெகதாபட்டினம், நாகப்பட்டினம் உள்ளிட்ட தமிழக பகுதியிலிருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்குச் சென்ற ஏராளமான மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டன. 

இந்த படகுகள் அனைத்தும் இலங்கையில் உள்ள ஊர்காவல்துறை, காங்கேசன் துறை மற்றும் மன்னார் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

இந்த நிலையில், கடந்த ஆண்டு இலங்கை கடற்படையால் பிடிபட்ட தமிழகத்தை சேர்ந்த எட்டு படகுகளை இலங்கை நாட்டு அரசுடைமையாக்கி ஊர்க்காவல்துறை நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. அதே சமயம் நான்கு தமிழக படகுகளை விடுவித்தும் ஊர்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டது. 

மேலும் விடுவிக்கப்பட்ட படகுகளை இத்தனை நாட்கள் பராமரித்து பாதுகாப்பாக நிறுத்தி வந்ததற்கான தொகையை இந்த மாதம் 14-ந் தேதிக்குள் படகின் உரிமையாளர்கள் அபராதமாக நீதிமன்றத்தில் செலுத்தினால் மட்டுமே அவை விடுவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight tamilnadu boats state owned by sri langan court order


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->