சுதந்திர தினத்தில் வீடு தோறும் கறுப்பு கொடி ஏற்றுவோம்.! - ஏகனாபுரம் கிராம மக்கள் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராமத்தில் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளை உள்ளடக்கிய 13 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 4791 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வழி விமான நிலையம் அமைக்க தமிழக அரசு முயன்று வருகிறது. இதற்கான முதற்கட்ட பணிகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்ததால் அதன் அடிப்படையில் தமிழக அரசு தனது பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில் கிட்டத்தட்ட 385 வது நாளாக பரந்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 13 கிராம மக்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக விவசாய நிலங்களும், குடியிருப்புகளும் நிறைந்த ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர்ந்து 385 வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டுதோறும் நடைபெறும் 6 கிராம சபை கூட்டதங்களிலும் பரந்தூர் பசுமை வழி விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

இந்த நிலையில் நாளை இந்தியாவில் 76 வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதால் அதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏகனாபுரம் கிராம மக்கள் நாளை ஏகனாபுரம் கிராம பள்ளியில் நடைபெற உள்ள சுதந்திர தின நிகழ்ச்சிக்கு மாணவர்களை அனுப்பாமல் புறக்கணிக்க உள்ளதாகவும், வீடுகள் தோறும் கறுப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க உள்ளதாகவும், கிராம சபை கூட்டத்தை புறக்கணிக்க உள்ளதாகவும் அறிவித்தனர்.

இது குறித்தான தகவலை அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி ஏகனாபுரம் கிராமத்திற்கு நேரடியாக சென்று ஏகனாபுரம் கிராம மக்கள் உடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார். முன்னதாக அவர் ஏகனாபுரம் கிராமத்தில் தெரு தெருவாக சென்று அப்பகுதியில் அமைந்துள்ள வீடுகள், நீர்நிலைகள், விவசாய நிலங்களை பார்வையிட்டார்.

பின்னர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர் கல்விச்செல்வியிடம் கடந்த ஒரு வருடமாக 6 முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் அது தொடர்பாக தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகம் எந்தவித அறிக்கையும் தாக்கல் செய்யவில்லை எனவும், பரந்தூர் விமான நிலையம் அமைக்க கூடாது எனவும் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் நேரடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை அடுத்து கிராம மக்களின் கோரிக்கையை தமிழக அரசுக்கு தெரிவிப்பதாக கூறிவிட்டு அப்பகுதியில் இருந்து மாவட்ட ஆட்சியர் புறப்பட்டுச் சென்றார். மேலும் நாளை நடைபெறும் சுதந்திர தின விழா மற்றும் கிராம சபை கூட்டத்தை புறக்கணிப்பது உறுதி என ஏகனாபுரம் கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ekanapuram Villagers announced hoist black flag on Independence Day


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->