அமைச்சர் உதயநிதியின் காரில் தேர்தல் அதிகாரிகள் சோதனை.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அன்றைய தினமே நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளும் அமலில் உள்ளது. இதற்காக தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இவர்கள் ஓட்டுக்காக பணம் கொடுப்பதை தடுக்கும் விதமாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிகாரிகள் சமீப காலமாக அரசியல் கட்சியினரின் வாகனத்தையும் சோதனை செய்து வருகின்றனர். இந்த நிலையில், பறக்கும் படை அதிகாரிகள் அமைச்சர் உதயநிதியின் காரை மறைத்து சோதனை செய்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகே தேர்தல் பரப்புரையை முடித்து விட்டு திரும்பி வந்த போது கரட்டுமலை அருகே அவரது காரை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வழிமறித்து சோதனை செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

election flying squad check in minister uthayanithi stalin


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->