எல்லாத்துக்கும் காரணம் அண்ணாமலை தான் - பொங்கி எழுந்த எஸ்பி வேலுமணி! அதிர வைக்கும் பேட்டி! - Seithipunal
Seithipunal


அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம் என்று, அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி தெரிவித்துள்ளார்.

இன்று கோவையில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவிக்கையில், "அதிமுக தலைநகர் அதிகமாக பேசவில்லை. அதிகமாக பேசியதே அண்ணாமலைதான். 

அதிமுக - பாஜக கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம். அண்ணா, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி குறித்து குறைகூறி பேசியவர் அண்ணாமலை.

கூட்டணியில் இருக்கும்போது கூட்டணி தர்மத்தை அதிமுக கடைபிடிக்கும். விலகினால் அவ்வளவுதான். அதிமுக மீதான விமர்சனங்களை தவிர்த்துவிட்டு அண்ணாமலை தனது தலைவர் பதவியை கவனிக்க வேண்டும்.

கோவையில் கடந்த முறை சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டபோது பெற்ற வாக்குகளைவிட அண்ணாமலை தற்போது குறைந்த வாக்குகளையே பெற்றுள்ளார்.

பாஜக கூட்டணியைவிட அதிமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றுள்ளது. கடந்த தேர்தலைவிட அதிமுக கூடுதல் வாக்குகளை பெற்றுள்ளது.  2026 சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை அதிமுக பெறும்.

2026 தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சியமைப்போம்" என்று எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

முன்னதாக, அதிமுக சறுக்கியது எங்கே என்பது குறித்து வேலுமணி தலைமையில் கோவையில் ஆலோசனை நடைபெற்றது. இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், அடிமட்ட பொறுப்பாளர்களிலிருந்து எம்.எல்.ஏ.க்கள் வரை பங்கேற்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Election Result ADMK SP Velumani Press meet


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->