குட் நியூஸ்... இந்த மாவட்டங்களில் மட்டும் தளர்வு.. தேர்தல் அதிகாரி தகவல்.!!
Election rules only in Tamilnadu border districts
தமிழகம் முழுவதும் மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று இரவு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர் தமிழ்நாட்டில் 7 மணி நிலவரப்படி 72.09 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவித்தார்.
அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் 75.67% வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 67.35% வாக்குகளும் பதிவாகியுள்ளதாக தெரிவித்திருந்தார்.
தமிழ்நாட்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்ற முடிந்துள்ளதால் தேர்தல் நன்னடத்தை விதிகள் தளர்த்தப்படுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தேர்தல் நடைபெறும் அண்டை மாநிலங்களின் எல்லை அமைந்துள்ள மாவட்டங்களுக்கு சோதனை நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ள தமிழக மாவட்டங்களில் மட்டும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை தொடரும் எனவும், மற்ற மாவட்டங்களில் தளர்த்துவது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் எனக் கூறியுள்ளார். இதனால் எல்லை மாவட்டங்களைத் தவிர மற்ற மாவட்டங்களில் தேர்தல் நடத்தை விதிகள் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் நடத்தை விதிகளின்படி பொதுமக்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் ரொக்கமாக எடுத்துச் செல்ல உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Election rules only in Tamilnadu border districts