சென்னையில் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு மாதமும் ரெயில்வே துறை சார்பில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனால், ரெயில்வே சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- "சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் அனைத்து மின்சார ரெயில்களும் நாளை காலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்படுகிறது. 

இதற்கு மாறாக சென்னை பூங்கா ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5 மணி முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு 23 சிறப்பு ரெயில்கள் 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். இதேபோல் மறுமார்க்கமாக, சென்னை பூங்காவில் இருந்து 14 சிறப்பு ரெயில்கள் தாம்பரத்திற்கு இயக்கப்படும்.

மேலும், செங்கல்பட்டில் இருந்து காலை 4 மணி முதல் 30 நிமிட இடைவெளியில் பூங்கா ரெயில் நிலையத்திற்கு 25 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும். தாம்பரத்தில் இருந்து காலை 3.55 மணியில் இருந்து 30 நிமிட இடைவெளியில் சென்னை பூங்கா ரெயில் நிலையத்திற்கு 13 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

electric train service change in chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->