மின்சார வாரியத்தில் பணிபுரிய வேண்டுமா? இதோ உங்களுக்காக.!! - Seithipunal
Seithipunal


மின்சார வாரியத்தில் பணிபுரிய வேண்டுமா? இதோ உங்களுக்காக.!!

கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாதம் 17ம் தேதி மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அதன் படி, அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் சட்டப்பூர்வ வாரியங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

அந்த வகையில், பொதுத்துறை நிறுவனங்களில் வரும் மின்சார வாரியத்தின் காலிப் பணியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. மூலம் நிரப்பப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை தமிழக அரசின் எரிசக்தி துறை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

"தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் 107வது வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில், நானூறு உதவி எலக்ட்ரிக்கல் என்ஜினீயர், ஐம்பது உதவி மெக்கானிக்கல் என்ஜினீயர், அறுபது  உதவி சிவில் என்ஜினீயர், அறுநூறு எலக்ட்ரிக்கல் தொழில்நுட்ப உதவியாளர், முன்னூறு இளநிலை உதவியாளர், எட்டு ஆயிரம் கள உதவியாளர் என்று மொத்தம் பத்து ஆயிரத்து இருநூற்று அறுபது காலிப் பணியிடங்களை நிரப்ப அரசாங்கத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. 

இதனை அரசு கவனமாக பரிசீலனை செய்து சென்னை உயர்நீதி மன்றத்தின் ஆணைகளுக்கு மதிப்பளித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் 10,260 இடங்களில் 200 தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு டி.என்.பி.எஸ்.சி.யை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உடனடியாக அணுகும். 

மேலும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் தன்னுடைய மனிதவளக் கொள்கையை வகுக்க அவசர நடவடிக்கை எடுக்க உள்ளது"; என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

electricity board announce vacancies in tamilnadu


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->