மின்சார வாரியம் அதிரடி அறிவிப்பு!!!மார்ச் 15ஆம் தேதிக்குள் விவசாய மின் இணைப்பு பணிகளை முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு!!!
Electricity Board takes action Officials ordered to complete agricultural electricity connection work by March 15th
சென்னை, மின் பகிர்மானக் கழகத் திட்டப் பிரிவு தலைமை பொறியாளர், அனைத்து தலைமை பொறியாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பினார். அதில் விவசாயம் மின் இணைப்பு பணிகளை மார்ச் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றறிக்கை:
மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்ததாவது, " 2024 - 2025 ஆம் ஆண்டுக்குள் 15,000 விவசாய மின் இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 11,551 இணைப்புகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இதில் சாதாரண பிரிவில் 58% இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும் திண்டுக்கல், மதுரை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம்,தேனி, காஞ்சிபுரம், தர்மபுரி, பல்லடம், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, நாமக்கல்,மேட்டூர், நாகப்பட்டினம், தெற்கு கோவை வட்டங்களில் மிகவும் மோசமான நிலையிலேயே இலக்கு எட்டப்பட்டுள்ளது. இது வெறும் 60% க்கும் குறைவு.

பயனாளிகளுக்கு முன்னுரிமை:
தட்கல் பிரிவில் 77% இணைப்புகள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. கோவை,மெட்ரோ, கோபி,காஞ்சிபுரம், நாமக்கல், திண்டுக்கல் வட்டங்களில் செயல்பாடு மோசமாக உள்ளன. இவற்றை முற்றிலுமாக வேகப்படுத்த வேண்டும். அரசு திட்டங்களுக்கு கீழ் வரும் பயனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இப்பணிகளை மார்ச் 15 க்குள் முடிக்க வேண்டும். " என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையானது விவசாயம் மின் இணைப்பு மற்றும் மின்சார வாரிய அலுவலகங்களில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும்,பணியில் இருப்பவர்களுக்கு இது ஒரு சவாலாகவே இருக்கிறது என்று பலரும் தெரிவிக்கின்றனர்.
English Summary
Electricity Board takes action Officials ordered to complete agricultural electricity connection work by March 15th