இன்னும் சற்று நேரத்தில்.. சென்னையின் முக்கிய பகுதிகளில் மின்தடை.!! உடனே சார்ஜ் போடுங்க.!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருவதால் பொதுமக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். சென்னையில் வெயில் தாக்கம் மற்ற மாவட்டங்களை ஒப்பிடும்போது குறைவாக உள்ள போதிலும் மரங்கள் இல்லாததால் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. 

இதனால் பொதுமக்கள் ஏசி இல்லாமல் வீடுகளில் இருக்க முடியவில்லை. இந்த நிலையில் அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இவ்வாறு இருக்க தமிழ்நாட்டின் ஒரு சில பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்தடை நீடித்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையின் முக்கிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி சென்னையில் கிண்டி வேளச்சேரி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. 

 

இதன் காரணமாக தில்லை கங்கா நகர், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் ஒரு சில பகுதிகளிலும், பழவந்தாங்கல், ஜீவா நகர், சஞ்சய் காந்தி நகர், வேளச்சேரி, ஆதம்பாக்கம், ஆண்டாள் நகர், பிருந்தாவனம் நகர், மகாலட்சுமி நகர், சாந்தி நகர், புழுதிவாக்கம், ஏஜிஎஸ் காலனி, இபி காலனி, மோகனபுரி, ஆதம்பாக்கம் நியூ காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electricity supply will be suspended today in major area in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->