காத்திருப்பு போராட்டம் நடத்த போகும் மின்வாரிய ஊழியர்கள்!
Electricity workers who are going to hold a waiting protest
மின்வாரிய ஊழியர்களின் சலுகையை பறிக்கும் அரசாணையை ரத்து செய்யக்கோரி காத்திருப்பு போராட்டம்!
தமிழக முழுவதும் வரும் 29ஆம் தேதி அனைத்து வட்ட மேற்பார்வையாளர் பொறியாளர்கள் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக வெளியீட்டுப்பட்டு உள்ள அறிக்கையில் " பிபி எண் 2 நாள் 14-4-2022 அறிவிப்பாணையை ரத்து செய்ய வேண்டும், தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பை கைவிட வேண்டும், மின்வாரிய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படையை உயர்த்தி வழங்கிட வேண்டும்" என கோரிக்கை வைத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
தங்களின் இந்த கோரிக்கையை முன்வைத்து பலமுறை மனு அளித்தோம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் இந்த காத்திருப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்வாரிய தொழிற்சங்க கூட்டமைப்பு குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தப் போராட்டமானது பொறியாளர்கள் அலுவலகம், மாவட்ட மின்வாரிய தலைமை அலுவலகம் மற்றும் கிளை கிளை அலுவலகங்கள் முன்பாக காலை முதல் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழக முழுவதும் மின்வெட்டு பிரச்சனை, மின் கட்டண உயர்வு என மக்கள் அல்லல் படும் நிலையில், தற்போது மின்வாரிய ஊழியர்களின் போராட்டமானது மேலும் மக்களை கவலையடைய செய்துள்ளது.
English Summary
Electricity workers who are going to hold a waiting protest