பள்ளிகள் திறப்பு - தூய்மையாளர்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மாதம் கடைசி வாரத்தில் இருந்து கோடை விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் 6 முதல் 12ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஜூன் 1ஆம் தேதியும், 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு ஜூன் 5ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

ஆனால், தமிழகத்தில் தொடர்ந்து வெயில் மற்றும் மழை பெய்து வருவதால், பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று ஏராளமானோர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் தான், கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தமிழகத்தில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் கழிப்பறைகள் சரியாக இருக்கிறதா?, தண்ணீர் தொட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா?, வகுப்பறைகள் பாடம் நடத்த ஏதுவாக இருக்கிறதா? என்பது குறித்து ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

employees clean school for reopen


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->