சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கு.! கவுதம சிகாமணிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பண பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கு.! கவுதம சிகாமணிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்.!

திமுகவின் மூத்த தலைவரும், உயர்கல்வித்துறை அமைச்சரமான பொன்முடி மற்றும் அவருடைய மகன் கௌதம சிகாமணி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூலை மாதம் 17 ஆம் தேதி அமலாக்க துறையினர் சோதனை மேற்கொண்டனர். 

அதில், பல முக்கிய ஆவணங்கள், வெளிநாட்டு பணம். மற்றும் முறைகேடாக வெளிநாட்டில் முதலீடு செய்தது தொடர்பான பண பரிவர்த்தனை குறித்தான ஆதாரங்கள் சிக்கியதாக தகவல் வெளியானது.

இதையடுத்து அமலாக்கத்துறையினர் அமைச்சர் பொன்முடி மற்றும் அவருடைய மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோரிடம் சோதனை நடத்தினர். அப்போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

இந்த நிலையில், பொன்முடி மற்றும் அவருடைய மகன் கௌதம சிகாமணிஇடம் நடத்திய சோதனையின் தொடர்ச்சியாக அமலாக்கத் துறை கவுதம சிகாமணி உட்பட 6 பேருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement Department Filing charge sheet.against mp gowthama sikamani


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->