அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு இன்று விசாரணை.! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது நடவடிக்கையின் போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவரது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்தனர்.

 இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை தொடங்கியுள்ளது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவர் குழு அவருக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்துவருகின்றனர். 

இந்த அறுவை சிகிச்சை முடிய 3 முதல் 4 மணி நேரங்கள் வரை ஆகலாம். இதய அறுவை சிகிச்சைக்கு பிறகு செந்தில் பாலாஜி 3 முதல் 5 நாட்கள் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருப்பார் என கூறப்படுகிறது.

இதற்கிடையே அமைச்சர் செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து அமலாக்கத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதி அளித்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அமலாக்கத்துறை உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enforcement Department's appeal will be heard today


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->