கடலூர் : ஒருதலை காதல் விவகாரத்தில் 17 வயது சிறுமி கடத்தல்.. இன்ஜினியர் உட்பட 4 பேர் கைது.! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் ஒருதலை காதல் விவகாரத்தில் 17 வயது சிறுமியை காரில் கடத்திய இன்ஜினியர் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்தவர் இன்ஜினியர் திருமாவளவன் (24). இவர் சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை திருமாவளவன் ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தின இரவு திருமாவளவன், அவரது நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து கடலூர் முதுநகர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த 17 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்றுள்ளனர்.

இதைப் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் இது குறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் இதுகுறித்து முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், சிறுமியை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் கடலூர் எஸ்பி அலுவலகம் அருகே சிறுமியை கடத்திக்கொண்டு செல்வதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து விரைந்து சென்ற போலீசார் காரை மடக்கி பிடித்து சிறுமியை மீட்டனர். மேலும் சிறுமியை கடத்திய திருமாவளவன் உட்பட நான்கு பேரையும் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து நான்கு பேரிடமும் இதுகுறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineer including 4 arrested for kidnaping 17 year old girl in Cuddalore


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->