பொறியியல் கலந்தாய்வு...63,843 பேருக்கு தற்காலிக ஒதுக்கீடு.....கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை எப்போது வழங்கப்படும்? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு நடைபெற்று வரும் நிலையில்,3-வது சுற்று கலந்தாய்வு கடந்த 23-ம்  தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த கலந்தாய்வில்  பங்கேற்க பொதுப் பிரிவின்கீழ் 93 ஆயிரத்து 59 பேர் தகுதி பெற்றனர். இந்நிலையில், நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவுக்குள் விருப்பமான கல்லூரி மற்றும் பாடப் பிரிவை தேர்வு செய்தவர்களில் பொதுப் பிரிவில் 58 ஆயிரத்து 889 பேர், 7.5 சதவீத ஒதுக்கீடு பிரிவில் 4 ஆயிcounselling

ரத்து 954 பேர் என மொத்தம் 63 ஆயிரத்து 843 பேருக்கு நேற்று காலை 10.30 மணிக்கு தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இதை உறுதி செய்ய அவர்களுக்கு இன்று மாலை 5.30 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிசெய்வது தொடர்பாக தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் புருஷோத்தமன் கூறுகையில், மாணவர்களுக்கு நாளை காலை 10.30 மணிக்குள் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Engineering Consultancy Provisional allocation for 63843 people When will college allotment order be issued


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->