சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி..வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் முன்னாள் அமைச்சர் பன்னீர்செல்வம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்!
Environmental Awareness Essay Competition Former Minister Panneerselvam felicitated the winners with prizes.
புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் சார்பில் பாகூரை அடுத்துள்ள சோரியங்குப்பம் முத்தமிழ்க் கூடல் இல்லத்தில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் தலைவர் நல்லாசிரியர் முனைவர் வெற்றிவேல் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஆலோசகரும் வரலாற்று விரிவுரையாளருமான முத்துஅய்யாசாமி, கலைமாமணி இராஜாராம் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் இரமேஷ் வரவேற்புரை வழங்கினார். துணைச் செயலர் கணபதி, நாடகக் கலைஞர் விஜயலட்சுமி நோக்கவுரை கூறினர்.

சிறப்பு விருந்தினராக புதுச்சேரி மேனாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் என்.ஜி.பன்னீர்செல்வம் பங்கேற்று கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசளித்துப் பாராட்டுரை வழங்கினார். புதுச்சேரி அரசு மகளிர் ஆணையத் தலைவி நாகஜோதி வாழ்த்துரை வழங்கினார். புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் பொறுப்பாளர் மற்றும் தலைமையாசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.
English Summary
Environmental Awareness Essay Competition Former Minister Panneerselvam felicitated the winners with prizes.