1 3/4 மணி நேரம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது தான் சாதனை - இபிஎஸ் பரபரப்பு பேட்டி.!
eps press meet about agriculture budget
வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் 2025-26-ம் ஆண்டுக்கான வேளாண்மை பட்ஜெட்டை சட்டசபையில் இன்றுத் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் ஏராளமான அறிவிப்புகள் வெளியாகின.
இந்த நிலையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வேளாண் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசியுள்ளார். அப்போது அவர் தெரிவித்ததாவது:-
* விவசாயிகளை ஏமாற்றுவதில் வல்லவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர். ஒன்றே முக்கால் மணி நேரம் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது தான் சாதனையே தவிர, பட்ஜெட்டில் எந்த ஒரு புதிய அறிவிப்பும் இல்லை.

* விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என்பது போலி தோற்றம் என்று நிரூபணமாகி உள்ளது. வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு நன்மை எதுவும் இல்லை. ஏமாற்றம் மட்டுமே.
* பல துறைகளை ஒன்றாக இணைத்து ஒரு அவியல் கூட்டு போல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தவறு செய்வதற்கு வசதியான திட்டங்களை தவிர வேறு எந்த திட்டமும் இல்லை.
* பட்ஜெட்டில் கூறியபடி சாகுபடி பரப்பு எதுவும் அதிகரிக்கவில்லை குறைந்துதான் போயுள்ளது. சாகுபடி பரப்பு 1.2 சதவீதம் குறைந்துள்ளது, அதிகரிக்கவில்லை.
* இருபோக சாகுபடி பரப்பை உயர்த்துவதற்கு தி.மு.க. அரசிடம் எந்த திட்டமும் இல்லை. தமிழகத்தில் கரும்பு மற்றும் நெல் உற்பத்தி குறைந்து விட்டது.
* ஜெயலலிதா ஆட்சியின்போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் தான் வேளாண் பட்ஜெட்டில் உள்ளதே தவிர புதிய திட்டங்கள் எதுவும் இல்லை" என்றுத் தெரிவித்தார்.
English Summary
eps press meet about agriculture budget