தண்ணி.. தண்ணி.."தொண்டையே போனாலும் விடமாட்டேன்"..பிரச்சார கூட்டத்தில் கலகலப்பு..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைய உள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். 

அதேபோன்று அதிமுக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். அதிமுக வேட்பாளரை ஆதரித்து எடப்பாடி பழனிச்சாமி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

அப்பொழுது பேசிய அவர் அதிமுக ஆட்சியில் ஈரோடு கிழக்கு தொகுதிக்காக மட்டும் கொண்டு வந்த பல்வேறு நலத்திட்டங்களை சொல்லி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் அதிமுக ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டுள்ளது ஆனால் திமுக ஆட்சியில் கொண்டு வந்த ஒரு நலத்திட்டங்களையாவது சொல்லி ஸ்டாலினால் வாக்கு கேட்க முடியுமா..? என கேள்வி எழுப்பினார்.

இந்த நிலையில் திமுக அரசை பற்றி தொடர்ந்து கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கும் பொழுது எடப்பாடி பழனிச்சாமிக்கு இருமல் வந்ததால் பேச்சை நிறுத்தினார். அப்பொழுது கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் "தண்ணி..தண்ணி..." என குரல் கொடுத்தார்.

பிரச்சார வாகனத்தில் அமர்ந்திருந்த உதவியாளரிடம் இருந்து தண்ணீரை வாங்கி குடித்துவிட்டு பேசிய பழனிச்சாமி "தொண்டையே போனாலும் விடமாட்டேன்" என என பதில் அளித்தார். இதனை சற்றும் எதிர்பார்க்காத பொதுமக்கள் கலகலவென சிரித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

EPS said i will not let go even if my throat goes


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->