அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அதிமுக பங்கேற்கும் - இபிஎஸ்..!
eps speech about to all party meeting
நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் தமிழகத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படுவதை எதிர்த்து அடுத்த மாதம் மார்ச் 5-ந் தேதி அனைத்து கட்சிகள் கூட்டம் நடத்தப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அனைத்துக்கட்சிக் கூட்டத்துக்கு அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி, பாரதிய ஜனதா உள்ளிட்ட 45 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் தெரிவித்ததாவது:- "தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக சார்பில் இரண்டு பேர் பங்கேற்பார்கள். தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான அதிமுகவின் நிலைப்பாட்டை கூட்டத்தில் தெரிவிப்போம்.
ஆளுங்கட்சியை தவிர மற்ற கட்சிகள் எல்லாம் எதிர்க்கட்சிகள் தான். ஆனால், நாங்கள் தான் பிரதான எதிர்க்கட்சி. போதைப்பொருட்கள், கள்ளச்சாராய விற்பனையை தமிழக அரசு கணடுகொள்வதில்லை" என்றுத் தெரிவித்தார்.
English Summary
eps speech about to all party meeting