தண்டியலங்கார பாடலை மேற்கோள் காட்டி எடப்பாடி கே.பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து.!
EPS wished for Tamil New year
மலையிடைப் பிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து என்ற தண்டியலங்கார பாடலை மேற்கோள் காட்டி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி தமிழ் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சித்திரை முதல் நாளான இன்று தமிழ் புத்தாண்டு தினமாக உலக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிச்சாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள வாழ்த்துச் செய்தியில்,
"மலையிடைப் பிறந்து, மாந்தர் தொழ உயர்ந்து உலகின் இருளைப் போக்கும் ஆற்றல் பெற்ற அரிய சக்தியாம் 'தமிழ்' மொழியை, தங்கள் உயிரினும் மேலாக நினைக்கும் உலகத் தமிழர்கள் அனைவரும்,
இளந்தமிழ் போல் இன்புற்றும் செந்தமிழ் போல் செம்மையுடனும் வாழ எனது இனிய 'சுபகிருது' தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
EPS wished for Tamil New year