பேக்கரி கடையில் ''குட்கா'' பொருட்கள்... போலீசார் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal



தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். 

அதன் அடிப்படையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

இதேபோல் கடைகளிலும் திடீரென சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சமீப காலமாக ஈரோடு மாநகராட்சி பகுதியில் குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை அதிக அளவில் இருப்பதாக தகவல் வந்துள்ளது. 

இதனை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் ஈரோடு, சத்தி ரோட்டில் சிஎன்சி கல்லூரி எதிரில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். 

அப்போது அங்குள்ள பேக்கரி ஒன்றில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், பான் மசாலா போன்றவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரிய வந்தது. 

இதனை அடுத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டு ரூ. 3 லட்சத்தை 3,480 மதிப்பிலான பான் மசாலா, குட்கா போன்ற தடை செய்யப்பட்ட 35 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். 

இந்த சம்பவம் தொடர்பாக பாலச்சந்திரன் (வயது 37) என்பவர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode bakery shop gutka tobacco confiscation


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->