பிரச்சாரத்தின்போது குழந்தைக்கு 'கருணாநிதி' என பெயர் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


நாளை மறுநாள் (வரும் 27ஆம் தேதி) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து காலை 9.30 மணி முதலே தீவிர பிரச்சாரத்தில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஈடுபட்டார்.

அப்போது ஈரோடு முனிசிபல் காலனியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "மகன் விட்டுச் சென்ற பணிகளை நிறைவேற்ற இந்த தேர்தலில் EVKS இளங்கோவன் போட்டியிடுகின்றார். 

பெரியார் குடும்பத்தை சார்ந்தவர். EVKS சம்பத் மகனுக்கு, கலைஞர் மகன் வாக்கு கேட்டு வந்திருக்கின்றேன். தேர்தல் வாக்குறுதியில் சொன்னவற்றில் 85% நிறைவேற்றி இருக்கின்றோம். எஞ்சிய 15% வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றியே தீருவோம்.

கடந்த சட்டசபை தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்த குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என்பது குறித்த அறிவிப்பு, வரும் மார்ச் மாதம் நடைபெறும் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும்" என்று, முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த பிரச்சார பயணத்தின்போது, குழந்தை ஒன்றுக்கு 'கருணாநிதி' என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெயர் சூட்டினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode By Election Cm stalin campaign 2023


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->