ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. இன்று வாக்கு எண்ணிக்கை.. டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
Erode by election vote counting today tasmac closed
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ திருமகன் ஈவேரா மறைவை ஒட்டி அந்த தொகுதி காலித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தல் ஆணையம் அந்தத் தொகுதியில் இடைத்தேர்தலை அறிவித்து அதற்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வந்தது.
அதேபோல், போட்டியாளர்களும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 27ம் தேதி நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் உள்ளிட்ட அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டு, அவை அனைத்தும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது. அனைத்து பெட்டிகளும் சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரிக்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு அனைத்தும் பாதுகாப்பாக வைப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பு அறையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குகிறதா என்பதை உறுதி செய்து, அறைக்கு சீல் வைத்து பூட்டப்பட்டது. மேலும், அங்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான ஒட்டு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் தொடங்குகிறது. அதனால், வாக்கு என்னும் மையத்தில் தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் ஈரோடு மாவட்ட போலீசார் என்று மொத்தம் 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியின் சுற்றுவட்டார பகுதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, எலவுமலை, சுண்ணாம்பு ஓடை, சித்தோடு ஆகிய இடங்களில் உள்ள 7 டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Erode by election vote counting today tasmac closed