ஈரோடு | காதலித்து திருமணம் செய்த பெண் தற்கொலை: பின்னணியில் அதிர்ச்சி தகவல்! - Seithipunal
Seithipunal


ஈரோடு, வேப்பந்தட்டை பகுதியைச் சேர்ந்தவர் சந்திரமதி. இவரது மகள் கிருத்திகா (வயது 20) இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு மாணிக்கம் பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

இவர்களுக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கணவன் மனைவி இடையே கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. 

இதனால் அவ்வப்போது பெற்றோர்கள் வந்து கணவன்-மனைவி இருவரையும் சமாதானம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் மீண்டும் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த கிருத்திகா வீட்டில் வைத்திருந்த எலி மருந்து சாப்பிட்டு விட்டார். 

இது குறித்து அறிந்த ரவி, கிருத்திகாவை உடனடியாக மீட்டு ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சேர்த்தார். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் கிருத்திகா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். 

இது தொடர்பாக வீரப்பன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருமணமாகி 2 ஆண்டுகள் ஆனதால் இந்த வழக்கு ஆர்.டி.ஓ விசாரணைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode love married woman committed suicide


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->