#சற்றுமுன் || மோசமான வானிலை., ஈரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்., பரபரப்பு சம்பவம்.! - Seithipunal
Seithipunal


பெங்களூரில் இருந்து கொச்சி புறப்பட்ட ஹெலிகாப்டர் ஒன்று, மோசமான வானிலை காரணமாக ஈரோடு, மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள வயல்வெளியில் தரையிறக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலம் ,பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் பாரத், இவரது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கேரள மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செல்ல முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து பெங்களூரில் இருந்து தனியார் நிறுவனத்தை சேர்ந்த ஹெலிகாப்டர் மூலம் கேரளாவுக்கு புறப்பட்டுள்ளனர்.

இவர்களின் இந்த ஹெலிகாப்டர் மோசமான வானிலை காரணமாக ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் வயல்வெளியில் தரையிறங்கியது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மோசமான வானிலை காரணமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரை அந்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்று திரண்டு வந்து பார்வையிட்டு செல்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode sathiyamngalam Helicopter landing in field


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->