ஈரோடு | திருமணம் ஆகாததால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்! போலீசார் விசாரணை! - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டம்: பவானி அருகே சித்தோடு ராமன் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவரது மனைவி ரேனுகா, மகன் மணிகண்டன் (வயது 30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. 

இதனால் மணிகண்டன் நீண்ட நாட்களாக மன வேதனையில்இருந்ததாகவும், அவருக்கு குடி பழக்கம் இருபதால் அவர் தினமும் குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாகவும் தெரிகிறது.  

இந்நிலையில் நேற்று காலை மணிகண்டனின் பெற்றோர் வழக்கம் போல் வேலைக்கு சென்று மீண்டும் இரவு வீட்டுக்கு வந்தனர். அப்போது வீட்டின் கதவு திறக்காமல் இருந்ததால் கதவை தட்டியுள்ளனர்.  

நீண்ட நேரமாகியும் கதவு திறக்காததால் பெற்றோர்கள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மணிகண்டன் அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த மணிகண்டனின் பெற்றோர்கள், மகனின் தற்கொலை குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், மணிகண்டனின் உடலை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

erode teenager not getting married suicide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->