#ஈரோடு : திருவிழாவில் ஆட்டு ரத்தத்தை குடித்த பூசாரி பலி!! - Seithipunal
Seithipunal


கோவில் திருவிழாவின் போது வேண்டுதலக்காக வெட்டப்பட்ட ஆட்டின் ரத்தத்தை குடித்த பூசாரி பரிதாபமாக உயிர் இழந்தார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நல்லகவுண்டம் பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவர் சபிப நாட்களாக உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

 செட்டியம்பாளையத்தில் உள்ள அண்ணாமலையார் திருக்கோவிலில் பூச சரியாக பணிபுரிந்து வருகிறார். வைகாசி மாச அண்ணாமலையார் திருப்பி அபி முன்னிட்டு பழனிச்சாமி தீவிரமாக பணி செய்துள்ளார். நேற்று நடைபெற்ற திருவிழாவில், அம்மனை அழைத்தல், இனி பிடிக்க செல்லுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.

திருவிழாவின் முக்கிய நிகழ்வான கீடாய் பூஜை நடைபெற்றது. பக்தர்கள் வேண்டுதலுக்காக வெட்டும் ஆட்டின் ரத்தத்தை வாழப்பழத்தில் பிசைந்து குழந்தை இல்லாதவர்கள், தொழில் தடை உள்ளவர்கள், மனநிம்மதி இல்லாதவர் சாப்பிடுவது வழக்கம்.

 இந்த நிலையில் கோவில் திருவிழாவில் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் வெட்டப்பட்டுள்ளது. ஆட்டின் ரத்தத்தை வாழைப்பழத்தில் பிசைந்து பூசாரியில் உள்ளிட்ட ஐந்து பேர் சாப்பிட்டு உள்ளனர். சாப்பிட்டு சிறிது நேரத்தில் பூசாரி பழனிசாமிக்கு தலை சுத்தல்,வாந்தி ஏற்பட்டுள்ளது.

சிறிது நேரத்தில் மயங்கி விழுந்த பழனிச்சாமியை அங்கிருந்தவர்கள் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் உதவியுடன் அழைத்து சென்றனர். பழனிச்சாமி சோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Erode temple festival Goat blood drinking person death


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->