#BigBreaking | ஆண்களை மிஞ்சிய பெண்கள்! ஈரோடு இடைத்தேர்தலின் மதியம் 1 மணி நிலவரம்!
ErodeEastByElection 1 pm
இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
காலை 11 மணி நிலவரப்படி 27 சதவீத வாக்குப்பதிவாகியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியின் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடைபெற்று வருவதாக கள நிலவரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் மதியம் 1 மணி நிலவரப்படி 44.56% வாக்குப்பதிவு நடந்துள்ளது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் இதுவரை 1,01,392 பேர் வாக்களித்துள்ளனர்.
இதில் ஆண் வாக்காளர்கள் 49,740 பேரும், பெண் வாக்காளர்கள் 51,649 பேரும் வாக்களித்துள்ளனர்.
முன்னதாக, அன்னை சத்யா நகரில் வாக்காளர்களுக்கு திமுக கூட்டணி கட்சியினர் 4000 ரூபாய் விநியோகம் செய்வதாக அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு நெருக்கமானவர்கள் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவடாவில் ஈடுபட்டு வருவதாக, அதிமுகவின் இன்பதுரை குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும் இது குறித்து இந்திய தேர்தல் ஆணையத்திற்கு மின்னஞ்சல் மூலம் புகாரையும் அளித்துள்ளார்.