ஏதோ ஒரு சம்பவத்தை வைத்து சட்ட ஒழுங்கு சரியில்லை என கூறுவதா? கொந்தளிக்கும் முன்னாள் டிஜிபி சைபேந்திரபாபு!
Ex DGP say about TN Law And Order
தமிழ்நாட்டில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து மாநிலத்தின் சட்ட ஒழுங்கு மோசமடைந்துவிட்டதாக கூறுவது முற்றிலும் தவறானது என முன்னாள் டிஜிபி சைபேந்திரபாபு கருத்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் பேட்டியில், நெல்லையைச் சேர்ந்த முன்னாள் காவல் ஆய்வாளர் ஜாகிர் உசேன் கொல்லப்பட்ட விவகாரத்தில், அவருக்கு காவல்துறையில் பணியாற்றியதாலேயே இந்த நிலை ஏற்பட்டது என கூற முடியாது.
இந்த கொலை சம்பவம், அவரது பணியால் நிகழ்ந்ததல்ல; அவருக்குள் இருந்த தனிப்பட்ட விரோதம் காரணமாகவே இது நடந்துள்ளது என்று அவர் விளக்கம் அளித்தார்.
இதனை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தில் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை எனக் கூறுவது தவறான அணுகுமுறையாகும். தனிப்பட்ட தர்க்கங்களை பொதுவான சட்ட ஒழுங்கு நிலைமைக்குப் பொருத்துவது சரியல்ல என்றும், மாநில காவல்துறை முறையாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார்.
English Summary
Ex DGP say about TN Law And Order