சுண்டைக்காய் விலையையும், கீரை விலையையும் கேட்டால் விலைவாசி குறையுமா? - ப சிதம்பரம் பேச்சு.! - Seithipunal
Seithipunal


நேற்று மாலை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையிலிருந்து டெல்லி செல்வதற்காக விமான நிலையம் செல்லும் வழியில் மயிலாப்பூரில் உள்ள தெருவோர கடையில் காய்கறி வாங்கினார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ நிதி அமைச்சரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டது. 

அந்த வீடியோவில், சென்னை மயிலாப்பூர் மார்கெட்டில் நிதியமைச்சர் காய்கறி வாங்கினார். அங்கு அவர் காய்கறி வியாபாரிகளுடனும் உள்ளூர்வாசிகளுடனும் உரையாடினார் என்று அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் காங்கேயத்திற்கு அருகே குட்டப்பாளைத்தில் உள்ள சிவசேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மையத்தை முன்னாள் மத்திய நிதி அமைச்சார் ப.சிதம்பரம் பார்வையிட்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது,

" சென்னை மயிலாப்பூரில் சென்று சுண்டைக்காய் விலை என்ன? கீரை விலை என்ன? என்று கேட்டால் மட்டும் விலைவாசி உயர்வுக்கு தீர்வு கிடைக்காது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு அந்நாட்டு மைய வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தி வருகின்றது. 

ஜப்பான் நாட்டுடன் டாலருக்கு நிகராக உள்ள நமது இந்திய ரூபாயை நிலையாக வைத்துக் கொள்ள ஏற்கனவே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. டாலரை கையிருப்பில் சீராக வைத்துக் கொள்ள ஸ்வாப் செய்யும் அளவுக்கு செல்ல வேண்டியது இல்லை. தற்போது கூட ரிசர்வ் வங்கியில் 500 பில்லியன் டாலர் அளவிற்கு கையிருப்பு உள்ளது. ஆனால், கரன்சி ஸ்வாப் அளவுக்கு நாம் தள்ளப்பட மாட்டோம். 

இந்தியாவின் வளர்ச்சி 6.5 என்று உலக வங்கி தெரிவித்த பிறகு அதை அரை மனதோடு மத்திய அரசு ஏற்றுக் கொள்கிறது. வளர்ச்சி குறைந்தால் விலைவாசி உயரும். அதை ரிசர்வ் வங்கி கவர்னரும் ஒப்புக்கொள்கிறார். இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பணவீக்கம் தொடர்ந்து அதிகரிக்கும் என்பதையும் அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ex finance minister chithambaram speech


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->