விஜயபாஸ்கர் மீதான சொத்து குவிப்பு வழக்கு ஒத்திவைப்பு!
Ex minister vijayabaskar case adjourned next month
அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் சி. விஜயபாஸ்கர் சுகாதார துறை அமைச்சராக பணியாற்றி தற்போது விராலிமலை தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
இவர் அ.தி.மு.க ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தனர்.
இதனை தொடர்ந்து விஜயபாஸ்கர் தொடர்புடைய 56 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இது தொடர்பான வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
210 பார்க்க குற்றப்பத்திரிகை கொண்ட இந்த வழக்கு கடந்த ஐந்தாம் தேதி முதல் விசாரணைக்கு வந்தது. ஆனால் இதுவரை 5 முறை வழக்கு நீதிமன்றத்திற்கு விசாரணைக்கு வந்த நிலையில் விஜயபாஸ்கர் 3 முறையும், அவரது மனைவி 2 முறையும் ஆஜராகி உள்ளனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று ஆறாவது முறையாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
ஆனால் விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி இருவரும் நேரில் ஆஜராகவில்லை. அவர்களது வழக்கறிஞர்கள் ஆஜரான நிலையில் இந்த வழக்கு அடுத்த மாதம் 2 ஆம் தேதி ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Ex minister vijayabaskar case adjourned next month