தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு..!!சாத்தனூர் அணையில் இருந்து 6040 கன அடி நீர் வெளியேற்றம்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக பல்வேறு நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக வட தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக பெய்த தொடர் கனமழையின் காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் தண்ணீர் நிரம்பி வழிகிறது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு 6040 கன அடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. இதனால் சாத்தனூர் அணையின் முழு கொள்ளளவான 117 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. இதனை தொடர்ந்து சாத்தனூர் அணையின் பாதுகாப்பு கருதி தென்பண்ணை ஆற்றில் அணைக்கு வரும் 6040 கன அடி தண்ணீர் முழுவதும் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Excess water release from sathanur Dam due to heavy rain


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->