திடீர் திருப்பம்.. தமிழ்நாட்டில் மிக மிக கன மழை "ரெட் அலர்ட்" வாபஸ்.!!
Extreme heavy rain Red alert withdraw in TN
தமிழ்நாட்டில் வரும் மே 20ம் தேதி 7 மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 7 மாவட்டங்களில் வரும் 20ம் தேதி மிக மிக கன மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மிக மிக கனமழை சிவப்பு நிற எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி வரும் மே 20ம் தேதி நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
முன்பு அறிவிக்கப்பட்ட மிக மிக கனமழை எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். இருப்பினும் அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்யுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களை தமிழக அரசு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கேட்டுக் கொண்டுள்ளது.
English Summary
Extreme heavy rain Red alert withdraw in TN