குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததால்.... - தமிழக அரசு அரசாணை தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குடும்ப கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை தோல்வி அடைந்ததால் பெண் ஒருவர், தமிழக அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அரசாணை இன்று தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது, "தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் குடும்பக் கட்டுப்பாட்டு அறுவை சிகிச்சை செய்யும் போது, பெண் இறந்தால்  வழங்கப்படும் இழப்பீடு தொகையானது ரூ.2 லட்சத்திலிருந்து ரூ.4 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கருத்தடை அறுவை சிகிச்சை செய்து ஒரு மாத காலத்தில் பெண் இறந்தால் வழங்கப்படும் இழப்பீடு தொகையானது ரூ.50 ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

கருத்தடை அறுவை சிகிச்சை தோல்வி அடைந்தால் வழங்கப்படும் இழப்பீடுத் தொகையானது ரூ.30 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது". என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

failure of family planning surgery Tamil Nadu government


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->