சென்னையில் 30 ஆண்டுகளாக ஊரை ஏமாற்றிய போலி டாக்டர் கைது..!! - Seithipunal
Seithipunal


சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்த சுதர்சன் குமார் என்பவர் எண்ணூர் நேதாஜி நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளாக ஊசி மற்றும் மாத்திரைகளை வழங்கி தனியாக கிளினிக் நடத்தி வந்துள்ளார்.

அவர் ஒரு போலி மருத்துவர் என தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சுதர்சன் குமாரின் கிளினிக்கில் மருத்துவத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி விசாரணை மேற்கொண்டனர்.

இந்த விசாரணையில் சுதர்சன் குமார் போலி மருத்துவர் என்பது உறுதியானது. இதனை அடுத்து சுதர்சன் குமாரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இவர் எண்ணூரில் 30 வருடங்களாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும் இவரிடம் இருந்து மருந்து, மாத்திரைகள் மற்றும் ரூ.1.5 லட்சம் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 30 வருடங்களாக மருத்துவம் பார்த்தது ஒரு போலீ டாக்டர் என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Fake doctor arrested in Chennai


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->