#திருப்பூர் || 10 ஆண்டுகளாக சிக்காத போலி டாக்டர் அதிரடி கைது!
Fake doctor arrested in Tirupur
திருப்பூர் மாவட்டம் பெட்டிக்காம்பாளையத்தில் ஒரு நபர் 10 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு மருத்துவம் பார்த்து வருவதாகவும், அவர் நடவடிக்கையில் சந்தேகம் இருப்பதாகவும் நேற்று அரசு மருத்துவத் துறைக்கு புகார் அனுப்பப்பட்டது. அந்த புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட மருத்துவ பணிகள் துறை இணை இயக்குனர் கனக ராணி தலைமையிலான குழுவினர் அப்பகுதிக்கு விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணையில் தங்கராஜா என்பவர் கம்பவுடனராக இருந்து டாக்டராக மருத்துவம் பார்த்தது தெரிய வந்ததை அடுத்து இணை இயக்குனர் கனகரணி அளித்த புகாரின் பேரில் குண்டடகம் போலீசார் தங்கராஜாவை கைது செய்தனர்.
போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் சேலத்தில் உள்ள ஒரு மருத்துவரிடம் உதவியாளராக பயிற்சி பெற்று பெட்டிகாம்பாளையத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஓட்டு வீட்டில் கிளினிக் நடத்தி வந்துள்ளார் எனவும், ஒரே அறையில் இரண்டு படுக்கைகளுடன் 24 மணி நேரமும் அந்த கிளினிக் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் அந்த கிளினிக்கில் இருந்து தையல், அறுவை சிகிச்சைக்கான வசதிகள் அடங்கிய பெட்டகம், அட்டைப் பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த மருந்துகள் உள்ளிட்ட பல மருத்துவ உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்ததோடு அவரிடம் இருந்த போலிச் சான்றிதழையும் கைப்பற்றியுள்ளனர்.
English Summary
Fake doctor arrested in Tirupur