போலி மருத்துவ விளம்பரங்கள்!...சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
Fake medical advertisements chennai high court sensational verdict
பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் மருத்துவர்கள், மருத்துவமனை தொடர்பான விளம்பரங்களை முறைப்படுத்தக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், மருத்துவர்கள், மருத்துவமனை தொடர்பான விளம்பரங்கள் பொதுமக்களை தவறான வழியில் அழைத்து செல்வதாகவும், போலியான விளம்பரங்கள் மூலம் பொதுமக்களை நம்ப வைப்பதாக மனுவில் கூறபட்டது. . குறிப்பாக போலி மருத்துவர்கள், போலி மருந்துகள், மருத்துவ சிகிக்சை முறைகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் தடை செய்ய வேண்டும் என்று வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
மங்கையர்க்கரசி என்பவர் தாக்கல் செய்த பொது நல மனு மீதான விசாரணையை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, மருத்துவர்கள், மருந்துகள் தொடர்பான விளம்பரங்களை ஊடகங்களில் தடை விதிக்க முடியாது என்றும், விதிகளை மீறி செயல்படும் மருத்துவர்கள் மற்றும் விளம்பரங்கள் மீது மருத்துவ ஆணையம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றும், மனுதாரர் இது சம்மந்தமாக மருத்துவ ஆணையத்திடம் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தனர்.
போலியான மருத்துவர்கள், போலியான மருந்துகள் தொடர்பான விளம்பரங்களை வெளியிட்டால், அது தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று கூறி, மனுவை தள்ளுபடி செய்தனர்.
English Summary
Fake medical advertisements chennai high court sensational verdict