பிரபல நகைகடையில் மோசடி: 2-வது நாளாக போலீசார் விசாரணை!
famous jewelry shop Fraud case 2nd day Police investigation
திருச்சியை தலைமை இடமாகக் கொண்டு சென்னை, கோவை, ஈரோடு, தஞ்சாவூர், நாகர்கோவில் உள்ளிட்ட 7 இடங்களில் பிரபல நகைக்கடை ஒன்று இயங்கி வந்தது.
இந்த நகைக்கடையின் அறிவிப்பை நம்பி ஏராளமானோர் பணம் முதலீடு செய்து ஆரம்பத்தில் வட்டி தொகை மாதம் தோறும் வழங்கப்பட்ட நிலையில் கடந்த 2 மாதமாக நகை கடை வழங்கிய காசோலை பணமில்லாமல் திருப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதலீட்டாளர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்த்து நாகர்கோவில் மற்றும் பல பகுதிகளில் உள்ள பிரணவ் ஜுவல்லரி கடைகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே திடீரென அந்த கடை மூடப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த முதலீட்டாளர்கள் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை கடையின் 11 கிளைகளிலும் நேற்று அதிரடியாக சோதனை நடத்தினர்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நாகர்கோவில் கிளையில் நேற்று மாலை ஆய்வு மேற்கொண்ட போது கடை ஊழியர்களை ஒரு இடத்தில் அமர வைத்து விட்டு கடையில் இருந்த நகைகளை பரிசோதித்தனர்.
2வது நாளாக இன்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தங்களது ஆய்வினை தொடர்ந்தனர். கடையில் உள்ள இருப்பு நகைகள், கணக்கு விவரங்கள், முதலீடு செய்தவர்களின் விவரங்கள் போன்றவை குறித்து போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
famous jewelry shop Fraud case 2nd day Police investigation