18 ஆண்டுகளாக வளர்த்து வந்த காளைக்கு  கோவில் கட்டும் விவசாயி..!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளகோவில் அருகே சேனாபதிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கே.சோமசுந்தரம். இவர் 18 ஆண்டுகளுக்கு முன்பு 10 மாதம் ஆன ஜல்லிக்கட்டு காளை மற்றும் கன்றுக்குட்டி ஒன்றை ஆசையாக வாங்கி அதற்கு கருப்பன் என்று பெயர் சூட்டி செல்லமாக வளர்த்து வந்தார். 

கருப்பனை 18 ஆண்டுகளாக வளர்த்து வந்தார். இந்நிலையில் வயது மூப்பின் காரணமாக கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ந் தேதி கருப்பன் இறந்தது. பின்னர் இறந்துபோன கருப்பனின் உடலை தனது சொந்த தோட்டத்திலேயே அடக்கம் செய்தார். 

இதன் பிறகு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 10ந்தேதி கருப்பன் அடக்கம் செய்த இடத்தில் கருப்பனின், உருவப்படத்தை வைத்து குடும்பத்தோடு சேர்ந்து பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தி அனைவருக்கும் அன்னதானம் வழங்கி வருகிறார். 

மேலும் இறந்துபோன கருப்பனுக்கு கோவில் கட்டப்பட்டு வருகிறது. 2023-ம் ஆண்டு நினைவு தினத்திற்குள் கோவில் கட்டுமான பணி கட்டி முடிக்கப்பட்டு விடும் என விவசாயி சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmer builds temple for bull


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->