வேலூரில் ஆட்சியர் அலுவலகத்தில் குமுறிய விவசாயி - 10 யூனிட்டுக்கு ரூ.7,275 கட்டணம் விதித்த சம்பவம்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள விருதம்பட்டு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று அளித்துள்ளார். அந்த மனுவில் அவர் தெரிவித்துள்ளதாவது:- 

"எனக்கு லத்தேரி அருகே உள்ள காளாம்பட்டு பகுதியில் விவசாய நிலம் உள்ளது. அந்த நிலத்தில் விவசாய பணிகளுக்காக மின் இணைப்பு பெற்றுள்ளேன். இந்நிலையில் இந்த மாதம் மின் கட்டணத்துக்காக மின் ஊழியர்கள் மின் அளவை கணக்கிட்டனர். அதில், நான் 10 யூனிட் மின்சாரம் உபயோகித்ததாக தெரிவித்துள்ளனர். 

ஆனால், அந்த 10 யூனிட்டுக்கு மின் கட்டணமாக ரூ.7,275 செலுத்த வேண்டும் என்று மின் அட்டையில் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பாக நான் சம்மந்தப்பட்ட மின் ஊழியர்களிடம் கேட்டபோது அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. இது தொடர்பாக மின் அளவீடு பணியாளரிடம் கேட்டபோது, சென்னையில் இருந்து இந்த தொகை விதிக்கப்பட்டதாக தெரிவித்தார். 

கடந்த மாதம் நான் 10 யூனிட் பயன்படுத்தியதாக தெரிவித்து அதற்கு ரூ.894 மட்டுமே கட்டணம் விதித்தனர். ஆனால், இந்த மாதம் 10 யூனிட்களுக்கு ஏன் இந்த மாறுபட்ட கட்டண விதிப்பு என்பது தெரியவில்லை. இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகளிடம் விசாரித்ததில், பாதிக்கப்பட்ட நபர் நிர்ணயிக்கப்பட்டுள்ள அளவை விட மின்பளு அதிகமாக பயன்படுத்தி உள்ளார். அதனால், அவருக்கு முன் வைப்பு தொகை மற்றும் மின் அளவு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது என்றுத் தெரிவித்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmer complained to collecter for charge raised electrc


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->