பனை வர்த்தக மையம் அமைப்பதற்கு விவசாயிகள் வரவேற்பு !! - Seithipunal
Seithipunal


சமீபத்தில் நடந்த தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் நிதி ஒப்புதலுக்கு பின், காதி கைவினைத் துறை, பனை பொருட்கள் விற்பனையை ஊக்குவிக்க, சாயல்குடியில், 20 லட்சம் ரூபாய் செலவில், சிறப்பு வர்த்தக மையம் அமைக்க யோசனை முன் வைக்கப்பட்டது. இதற்கு ராமநாதபுரம் விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதிகாரப்பூர்வ அறிக்கையின் படி, தற்போது ராமநாதபுரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் உள்ளன.

தமிழகம் ராமநாதபுர மாவட்டத்தில் உரிமம் பெற்ற 3,540 பனை மர விவசாயிகள் மற்றும் 10,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பனை வெல்லம் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பருவ காலத்தில், சுமார் 1.1 லட்சம் மெட்ரிக் டன் பனை வெல்லம் இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டிலேயே பனை வெல்லம் அதிக அளவில் உற்பத்தி செய்யும் மையமாக இருப்பதால், இந்த வர்த்தக மையம் பனை வெல்லம் விற்பனையை மேலும் மேம்படுத்தும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

பனை வெல்லத்திற்கான வர்த்தக மையம் அமைக்க அரசு எடுத்துள்ள முயற்சி பாராட்டத்தக்கது. ஆனால், பல தொழில்நுட்ப சிக்கல்களை தீர்க்க வேண்டியுள்ளது. சர்க்கரையில் இருந்து தயாரிக்கப்படும் போலி வெல்லம் சந்தையில் அதிக அளவில் உள்ளது. தயாரிப்புகளின் தரத்தை உறுதி செய்வதற்காக மையத்தில் தர உத்தரவாதக் குழுவை நிறுத்த வேண்டும் என பனை வெல்ல விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விவசாயிகளின் உற்பத்திப் பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க இந்த வர்த்தக மையம் உதவும் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர். நேற்றைய சந்தை நிலவரப்படி, சந்தையில் 10 கிலோ பனை வெல்லம், 3,000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில், விவசாயிகளுக்கு 2,500-2,800 ரூபாய் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை தனியார் நிறுவனங்களுக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக விவசாயிகள் தனியார் வியாபாரிகளிடம் முன்பணம் பெற்று, பருவ காலம் முடிந்து விளைபொருட்களை விற்பனை செய்வார்கள். உத்தேச வணிக மையத்திலும் இதுபோன்ற திட்டங்கள் இருந்தால், விவசாயிகளுக்கு பெரிதும் பயனளிக்கும் என பனை வெல்ல விவசாயிகள் தெரிவித்தனர்.

சாயல்குடியைச் சுற்றியுள்ள 10 கிராமங்களில் 4,000-க்கும் மேற்பட்ட பனை வெட்டுபவர்கள் இருப்பதாகவும், மேலும் ஒரு நாளைக்கு சராசரியாக 4 டன் பனை வெல்லம்  அங்கு உற்பத்தி செய்யப்படுகிறது. எனவே, அவற்றின் உற்பத்தியையும் எளிதாக்க கூடுதல் நிதி ஒதுக்கப்படலாம் என பனை வெல்ல விவசாயிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Farmers are welcome to set up palm trading centre in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->