நாளை விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்..விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் அழைப்பு!
Farmers Welfare Day Meeting Tomorrow District Collector M Prathap invites farmers
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 25 ம் தேதிநாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம் வரும் 25.04.2025 அன்று நாளை காலை 10 மணிக்கு நடத்திட மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாய பெருமக்கள் விவசாயம் தொடர்பாக தங்களுக்கும் தங்கள் பகுதிகளில் ஏற்படும் குறைகளுக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். மேலும், இக்கூட்டத்தில் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வேளாண்மைப் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவு துறை, வங்கிகள், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்வாரியம், வருவாய் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பேரூராட்சி, நகராட்சி, பொதுப்பணித்துறை மற்றும் இதர வேளாண் சார்ந்த துறைகளின் மாவட்ட அளவிலான தலைமை அலுவலர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளார்.
எனவே, இக்கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து விவசாயிகள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் தெரிவித்தார்.
English Summary
Farmers Welfare Day Meeting Tomorrow District Collector M Prathap invites farmers